Tuesday, January 31, 2012

தெளிவாய் உன் இலக்கை தெரிந்து கொண்டால் புழுவாய் இருந்தாலும் உழுவாய் ஓர் நிலத்தை...



காலத்தின் போக்கிலே வாழ்க்கையை ஓடிக்கிட்டிருந்த எனக்கு.. என் சொந்தங்களின் சில ஏளனமான கதைகள் என் நெஞ்சிலே தீயை மூட்டின.!
வாழ்க்கையில சாதிக்கணும் என்ற வெறியோட கடந்த கால அனுபவங்களை படிப்பினையாக வைச்சு இலட்சியம் (Pilot / Captain)நோக்கிய பயணத்துக்காக காத்துக்கிட்டு இருந்தன்.. அதிஸ்டமே கூரைய பிரிச்சுக்கொண்டு வந்ததுபோல எனக்கும் கப்பலில் கேப்டன் ஆகுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது.. என் அப்பாவின் & காதல் தேவதையின் விருப்பத்துடன் மட்டும் (அம்மாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும்).. நான் ஒருவரின் கருத்துக்களையும் செவிமடுக்காது என் தன்னம்பிக்கையை மட்டும் நம்பி, களம் சென்றேன்.. மிகப்பெரிய தொகையை என் அப்பா என் விருப்பத்துக்காக சிறிதும் ஜோசிக்காது முதலீடு செய்தார்.. அது என்னை மனமுருக வைத்தது..!! விளையாடி திரிஞ்ச காலம் இனி முற்றாக மாற்றியமைக்க வேண்டிய கடைப்பாடு என் மேல் போடப்பட்ட பெரிய சுமை.. கஷ்டங்களை அனுபவித்தேன்.. சிறு வேலை கூட செய்தறியாத எனக்கு அங்கு சமாளிப்பது என்பது... வார்த்தைகளால் வருணிக்க முடியாதவை..!! இருந்தாலும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்தேன்..
அதற்கு பலனாக.. முடிவில், எனது முதலாவது தடைக்கல்லை BatchTop உடனும் Best Seamanship என்ற Award உடனும் சாதித்துவிட்டேன்..
என் வாழ்க்கை பயணத்தில் என் அப்பா & அம்மாவுக்கு நான் கொடுத்த மிகப்பெரிய சந்தோஷமான தருணம் இது..!!
இது என் பயணத்துக்கு உத்வேகத்தையும் பலமான அத்திவாரத்தையும் இட்டுள்ளது..
இது ஆரம்பமே தவிர..... முடிவில்லை..!!
இன்னும் சாதிக்கவேண்டிய தருணங்கள் நிறையவே இருக்கு..
என் அப்பா, அம்மா, அண்ணா & காதல் நாயகிக்கு செய்ய வேண்டியவை நிறைய உள்ளன..!!
My Dad Lighted Up My Life..!! & My Girl Made Me So Happy Throughout The Course Period..!!

பயணங்கள் முடிவதில்லை..!!


அன்புடன்,
நிம்மி.

செல்ஃபோன் காதல்..!!

செல்ஃபோனில் காதலித்துப்பார்...!!!


உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும் 
உலகம் உன்னையே பார்க்கும் 
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும் 
உனக்கும் வறுமை வரும் 
கடன்கள் அதிகமாகும் 
ரீலோட் கடைக்காரன் கடவுளாவான் 
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும் 
காதிரண்டும் செவிடாகும் 
செல்ஃபோனில் காதலித்துப்பார்... 


குப்பை மேட்டில் நின்று கதைப்பாய் 
பல நாட்கள் குளிக்கமாட்டாய் 
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய் 
வந்துவிட்டால் வருசங்கள் நிமிசமென்பாய்
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரனாய்ப் பார்க்கும் 
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய் 
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன் போல் நடந்து திரிவாய் 
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரிலோட் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய். 
செல்ஃபோனில் காதலித்துப்பார்... 


உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும் 
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் Missed Call மட்டும் தெளிவாய்க் கேட்கும் 
உன் ஃபோனே Battery டவுன்னாகி உனக்கு ஆப்படிக்கும் 
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும் 
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும் 
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்
Miss Call வராவிட்டால் பைத்தியம் பிடிக்கும் 
Miss Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்... 


கடன்களை வாங்கி வாங்கியே ரீலோட் பண்ண உன்னால் முடியுமா? 
Out Goingம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா 
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா 
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா 
சபையிலே மெதுவாகவும் தனிமையிலே உருகி உருகியும் பேச உன்னால் முடியுமா 
ஃபோன் சூடாகவேண்டுமா 
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும் பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா 
செல்ஃபோனில் காதலித்துப்பார்... 


Dialog (சிம்) கொம்பனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும் 
Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும் 
டயலொக் சிம்முக்கும் மொபிடெல் சிம்முக்கும் கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும் கழிவறையில் உட்காந்து கொண்டு பேசவும் முடியுமே 
கட்டாந்தயில் படுத்துக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும் 
செல்ஃபோனில் காதலித்துப்பார்.. 


பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும் 
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும் 
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும் 
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும் 
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ல் பண்ணாமல் விட்டாலும் 
செல்ஃபோனில் காதலித்துப்பார்.. 


நீ பிச்சக்காரனாவாய் 
இல்லை கடன்காரனாவாய்
இரண்டில் ஒன்று உனக்கு நிச்சயம்..!! 
செல்ஃபோனில் காதலித்துப்பார்..........:


(குறிப்பு:- இது முற்றிலும் கேள்வி ஞனானமே தவிர அனுபவம் அல்ல)

Monday, May 25, 2009

காதல் கொண்ட வலி எ(நிமல)ன்னுடனேயே போகட்டும்..!!





கண்ணை விரும்பினேன்,

உன்னை எனக்கு காட்டி கொடுத்ததால்....

என் உயிரை விரும்பினேன்,

உன்னோடு வாழப் போகிறதே என்பதனால்.....

என்னையே விரும்பினேன்,

நீ வந்த பின் என்னில் ஏற்பட்ட மாற்றத்தால்......

இவை அனைத்தும் பொய்யானால்...

என்னையே நான் இழக்க நேரிடலாம்....

மீட்டிப் பார்க்கிறேன் என்னுடைய நாளேடுகளை...

அங்கே உன் பெயர் தவிர வேறு ஏதும் என் கண்ணுக்கு அகப்படவில்லையடி....

காதலிக்கும் முன் ஒரு கணம் யோசித்து இருந்தால்..

காதலித்த பின் ஏன் இந்த கலக்கம்.....????

பெண்ணே !!

வந்து விடு பெண்ணே ...என்னிடமே வந்து விடு.........!!

காதலை உணர்ந்து வந்த காத(நிம)லன் நானே...




காதலை உணர்ந்து வந்த காதலன் நானே.! 
உன் காதலை சுமந்து வந்த கருவறையும் நானே.!

கலையில் உருவான ஒவியமா நீ ?
அல்ல என் கதைக்குள்ளே உருவான கற்பனையா நீ?
நீ என் நிழலா? இல்லை என் நிஜமா?


மேகத்தை பெண்ணாக அழைத்து
அனுப்பிய என் கனவுதேவதையே..
வேகத்தை நதியாக வளைத்து
உருகிய என் காதல் தேவதையே.

ப்ரம்மன் உன்னை படைத்தது போலவே
நானும் காதலை விதைத்துவிட்டேன்.!


சினேகத்தை உயிராக நினைத்து
வருடிய என் இதயக் காதலியே..
தேகத்தை காலமாக இணைத்து
நாடிய என் இதயக் காவியமே.!

கவிஞன், தானும் தன் மாதை வருணித்தது போலவே
நானும் உன்னை ரசித்துவிட்டேன்.!